ஆட்டைக்காணவில்லை !
(பீ. எம். கமால், கடையநல்லூர்)
காணவில்லை !
இருந்தும்-
யாரும்
கண்டுபிடிக்க
முயலவில்லை !
"போனால் போகட்டும் போடா "
என்று
பொடுபோக்குத் தனமாக
அவரவர் வேலையை
அவரவர் பார்க்க
நாட்கள் என்னவோ
நடக்கின்றது !
இன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை !
நம்
சமுதாயச் சந்தையில்
மேய்ந்துகொண்டிருந்த
அந்த ஆட்டை இன்னும்
காணவில்லை !
யாரோ
சுயநலத்துக்காக
பிரியாணி சமைக்க
குர்பானி கொடுத்து விட்டார்களோ ?
அந்த ஆடு
ஹப்லுல்லாஹ்வால்
கட்டப்பட்டிருந்தது !
ஈமான் புல்லை
மேய்ந்து அசைபோட்டு
இஸ்லாத்தின் தூண்களில்
கட்டப்பட்டிருந்தது !
அன்பியாக்களின்
வாரிசுகள்
மேய்ப்பர்க ளானார்கள் !
அவர்களுக்குள்ளே
சச்சரவு சண்டைகள்
சந்தைக் கூக்குரல் !
ஆடு மிரண்டு
அறுத்துக்கொண்டு
ஓடிப்போனது;
ஊர்வந்து சேரவில்லை !
ஆட்டைப் பராமரிக்க
ஊர்ஜமா அத்தும்
ஒத்துவரவில்லை !
அவர்களும்
கவுரச் சண்டையால்
கயிற்றை விட்டுவிட்டனர் !
பாவம் ! ஆடு
அநாதை ஆகி
எங்கு கிடக்கிறதோ ?
தோழர்களே ! வாருங்கள் !
அந்த ஆட்டைக் கண்டுபிடித்து
சமுதாயச் சந்தையில்
மீண்டும் மேய
விடுவோம் வாருங்கள் !
அந்த ஆட்டின் நெற்றியில்
இப்படி எழுதி
ஒட்டியிருக்கும் :
ஒற்றுமை !
(பீ. எம். கமால், கடையநல்லூர்)
காணவில்லை !
இருந்தும்-
யாரும்
கண்டுபிடிக்க
முயலவில்லை !
"போனால் போகட்டும் போடா "
என்று
பொடுபோக்குத் தனமாக
அவரவர் வேலையை
அவரவர் பார்க்க
நாட்கள் என்னவோ
நடக்கின்றது !
இன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை !
நம்
சமுதாயச் சந்தையில்
மேய்ந்துகொண்டிருந்த
அந்த ஆட்டை இன்னும்
காணவில்லை !
யாரோ
சுயநலத்துக்காக
பிரியாணி சமைக்க
குர்பானி கொடுத்து விட்டார்களோ ?
அந்த ஆடு
ஹப்லுல்லாஹ்வால்
கட்டப்பட்டிருந்தது !
ஈமான் புல்லை
மேய்ந்து அசைபோட்டு
இஸ்லாத்தின் தூண்களில்
கட்டப்பட்டிருந்தது !
அன்பியாக்களின்
வாரிசுகள்
மேய்ப்பர்க ளானார்கள் !
அவர்களுக்குள்ளே
சச்சரவு சண்டைகள்
சந்தைக் கூக்குரல் !
ஆடு மிரண்டு
அறுத்துக்கொண்டு
ஓடிப்போனது;
ஊர்வந்து சேரவில்லை !
ஆட்டைப் பராமரிக்க
ஊர்ஜமா அத்தும்
ஒத்துவரவில்லை !
அவர்களும்
கவுரச் சண்டையால்
கயிற்றை விட்டுவிட்டனர் !
பாவம் ! ஆடு
அநாதை ஆகி
எங்கு கிடக்கிறதோ ?
தோழர்களே ! வாருங்கள் !
அந்த ஆட்டைக் கண்டுபிடித்து
சமுதாயச் சந்தையில்
மீண்டும் மேய
விடுவோம் வாருங்கள் !
அந்த ஆட்டின் நெற்றியில்
இப்படி எழுதி
ஒட்டியிருக்கும் :
ஒற்றுமை !
ஐ நா சபையின் வாக்குமூலம்
ReplyDelete(பீ. எம். கமால், கடையநல்லூர்)
ஐ நா சபையாக
ஆரம்பிக்கப்பட்ட நான்
பொய் நா சபையாகப்
போய்விட்டேன் இப்போது !
உலகத் தலைவர்களே !
வாருங்கள்; என்னிடத்தில்
உலகப் பயங்கரவாதி
உருவாக்கி வைத்திருக்கும்
கத்தரிக் கோல் எந்தன்
கைகளிலே உள்ளது !
முடிவெடுக்கும் இடமாக
முன்னாளில் நானிருந்தேன் !
இப்போதோ
முடிஎடுக்கும் சலூனாக
மாறிநான் போய்விட்டேன் !
என்
உச்சந்தலையில்
உட்கார்ந்து இருக்கின்ற
பெயர்ப் பலகை மாற்ற
பெரியோரே வாருங்கள் !
ஐ நா சலூன் என்று
போர்டை மாற்றப்
புறப்பட்டு வாருங்கள் !
என்
சமையல் அறையில்தான்
சமாதானப் புறா
சமைக்கப் படுகிறது !
அதன்
வறுவல் வாசம் தான்
உலகத்தில் ஆங்காங்கே
உபவாசம் கலைக்கிறது !
என் சமையலறையில்
தலைமைச் சமையல்காரர்
அண்ணாவி அமரிக்க
அடாவடிக் காரன்தான் !
நீங்கள்
பிரமிடுகளைப் பார்த்து
பிரமித்து இருப்பீர்கள் !
அவையெல்லாம்
காலாவதி ஆன
கல்லறை உண்டியல்கள் !
பாடம் செய்யப்பட்டு
பத்திரமாய் வைத்திருக்கும்
இறந்த மன்னர்களின்
இடுகாடு அதுவேதான் !
அதைவிடப் பெரிய
அழகான கல்லறை
உலகத்தில் நான்தான்
உங்களுக்குத் தெரியுமா ?
ஆமாம் -
சமாதானத்தின்
சமாதியே நான்தான் !
வெட்டியான் இங்கே
வேறு யாருமல்ல -
உலகக் கொலைகளுக்கு
ஒட்டுமொத்தக் குத்தகை
எடுத்து வைத்திருக்கும்
எத்தன் அமரிக்கா தான் !
நான்
பிரமிடுகளைவிடப்
பெரிய சமாதி
என்னிடம்
அடங்கிக் கிடப்பது
அகிலத்தின் சமாதானம் !
ஒருநாளில்
புறாக்களுக்குத்தான்
புகலிடம் என்னிடம் !
இப்போதோ
ராஜாளிகளுக்கு
நான்தான் அடைக்கலம் !
சாந்தி சமாதானம்
சரித்திரத்தில் வேண்டுமென்று
வேண்டி நிற்பவற்கு
விரோதியே அமரிக்காதான் !
அமரிக்காதான் எனக்கு
ஆஸ்தான முதலாளி !
அதன்
கண்ணசைவில்தான் என்
கால்களே நடக்கும் !
அது
ஒருவிரலை உயர்த்திவிட்டால்
நான்
ஒன்றுக்குப் போய்விடுவேன் !
அதன்
வீட்டோ விரலுக்கு
வீரியம் கூடுதல்தான் !
ஈராக் போரினிலிலே
எத்தனைபேர் செத்தார்கள்
அத்தனை பேர்களுக்கும்
என் கையிலிருந்த
வெள்ளைக் கொடிதான்
சவக்கோடி ஆனது !
என்னால் முடிந்தது
இதுமட்டு மேதான் !
போரை நிறுத்துதற்குப்
போக்கத்தவன் ஆனேன் !
வன்மையாய்க் கண்டிக்க
வக்கற்றுப் போனேன் !
தார்க் குச்சி என்னிடம்
தானிருந்த தென்றாலும்
போர்க்குற்ற வாளிகளை
போய்விடச் சொன்னவன் நான் !
புஷ்களையும் ஒபாமா
போன்றகொலை காரனையும்
இராஜபக்ஷே போன்ற
நரமாமிச நாய்களையும்
விட்டு வைத்திருக்கும்
விஷமியுமே நான்தான் !
புத்தன் ஏசுபிரான்
புனிதநபி நாயகத்தின்
போதனைகள் எல்லாமே
எத்தன் அமரிக்காவின்
இதயத்தில் ஏறாது !
அமரிக்க அரசியல்
சாசனமே குருதி
கொண்டு எழுதப்பட்ட
"குண்டு" வாசகங்கள்தான் !
என்மீது-
சமாதானச் சாறால்
ஒருபோதும் அபிஷேகம்
நடவாது; அமரிக்க
தேசீய மொழியான
குருதி மொழியில்தான்
குளித்தெழு கின்றேன்நான் !
என்
முற்றத்தில் வண்ணத்தில்
கைஅசைக்கும் பன்னாட்டுக்
கொடிஎல்லாம் அமரிக்கா
கக்கூசில் கைதுடைக்கும்
கைக்குட்டை தானோ ?
உலக மக்களின்
உயிர்ப்பலி பீடம் நான் !
வெட்டரிவாள் அமரிக்க
அதிபனின் கைகளிலே !
இஸ்ரேலுக் கெதிராக
என்னால் எந்த
மூச்சும்கூட
விடமுடியவில்லை !
என்முதுகில்
ஏகாதிபத்தியம்
ஏறி மிதிப்பதினால் !
பலஸ்தீன முஸ்லிம்கள்
படுகின்ற பாடெண்ணி
என்தலை இப்போது
தாழ்ந் திருக்கின்றது !
எப்போது அமரிக்கா
தரைமட்ட மாகுமோ
அப்போது தானெனது
தலைநிமிரும் புன்னைகையில் !
உலக வரைபடத்தில்
உட்கார்ந்து இருக்கின்ற
அமரிக்கா இஸ்ரேல்
அழிந்து விடுமென்றால்
பூமியே இங்கு
புனிதம் அடைந்து விடும் !
சமாதானத்
தாயைக் கற்பழிக்கும்
தலைநகராம் அமரிக்கா
முஸ்லிம் மன்னர்களின்
மூன்றாவது கிப்லா !
மக்காவை நோக்கி
மக்களெல்லாம் நின்றுதொழ
முஸ்லிம்
மன்னர்கள்மட்டும்
வெள்ளை மாளிகைமுன்
விரிக்கின்றார் முசல்லாவை !
அதனால்தான்
பயங்கர வாதிஎன்ற
பட்டத்தை முஸ்லிம்கள்
காசுசெலவில்லாமல்
கைகளிலே வாங்குகின்றீர் !
நியாயத் தராசு
அமரிக்கக் குரங்கினிடம் !
ஐநா என்னிடம்
அப்பம் மட்டுமே !
மதரசாக்கள்-
ReplyDeleteஅறிவா யுதங்களை
பட்டை தீட்டுகின்ற
பட்டறைகள் !
அரபி மொழியின்
அகரம் தொட்டுச்
சிகரம் ஏறும்
ஆற்றல் கொடுக்கும்
அறிவா லயங்கள் !
கலிமா விளக்கைக்
கையில் ஏந்தி
கசடுகள் வெளுக்கும்
கர்த்தனின் படித்துறைகள் !
பிஞ்சுகள் பழுத்து
நெஞ்சுகள் வெளுத்து
அஞ்சிட வாழ்வை
அமைத்துக் கொடுக்கும்
அறவா லயங்கள் !
திருத்தமுடனும்
தெள்ளிய நல்ல
அர்த்தமுடனும்
திருமறை ஓதிட
வழிமுறை சொல்லும்
கோமான் நபியின்
குருகுலங்கள் !
இங்கே -
பிள்ளை நிலவுகள்
பேரொளி காட்டும்
வெள்ளை நிலவுகளாய்
வெளிச்சம் பெறுகின்றன !
மதரசாக்கள்-
"ஓதுக" என்ற
கட்டளை வார்த்தை
செயலாக்கம் பெறுகின்ற
செயலகங்கள் !
வீணில் திரியும்
விளையாட்டுப் பிள்ளைகள்
தீனில் திரும்பும்
திருப்பு முனைகள்!
மதரசாக்கள் -
அத்தஹயாத்து விரலைப்போல
தீனின் திசையைக்
காட்டும்
திசைகாட்டி மரங்கள் !
மதரசாக்கள்-
நபிகளின் வாரிசுகளாய்
நடமாடப் பிள்ளைகட்கு
நடைவண்டி செய்து தரும்
தச்சுப் பட்டறைகள் !
நச்சுக் கருத்துக்களை
நசுக்கி எரிகின்ற
அச்சுப் பட்டறை
அரபி மதரசாக்கள் !
சுன்னத்தைப் பேணி
ஜனனத்தை அடைகின்ற
எண்ணத்தை இதயத்துக்
கிண்ணத்தில் ஊற்றுகின்ற
அன்னத்தின் அமுத
சுரபிகள் தான் இந்த
அரபி மதரசாக்கள் !
அமுத ஊற்றின்
ஆரம்ப ஊற்று இந்த
அரபி மதரசாக்கள்
வானத்துக் கல்வியை
வழங்கி நிற்கின்ற
வாசஸ்தலங்கள் !
காணாமல் போன
ஒட்டகங்கள் இந்த
கல்விக் கூடங்களில்தான்
கண்டுபிடிக்கப் படுகின்றன !
மதரசாக்கள்-
பாலை வனங்களாய்
வருகின்ற பாலர்களை
சோலை வனமாக்கிச்
சுகம்தரும் பூங்காக்கள் !